• Jun 30 2024

வடமாகாண பொறியியலாளர்களுக்கிடையே கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்த தீர்மானம்...!

Sharmi / Jun 27th 2024, 11:37 am
image

Advertisement

பொறியியலாளர்களுக்கு மத்தியில் ஒரு கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை நடத்தவுள்ளதாக இலங்கை பொறியியல் நிறுவனத்தின் வடக்கின் அத்தியாயத்தை சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். 

நேற்றைய தினம்(26)  யாழில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பொறியியலாளர்களுக்கு மத்தியில் "Northern Engineers Premier League" என அழைக்கப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடத்தவுள்ளோம்.

வழக்கமாக ஒரு கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்துவது வழமை. ஆனால் கடந்த வருடத்திலிருந்து  "Northern Engineers League" என்று சொல்லி அதனை அறிமுகப்படுத்தினோம்.

எங்களின் Northern Engineers இன் தலைவரை நிர்வாகியாக அடிப்படையாக கொண்டு உருவாக்கி கடந்த வருடத்திலிருந்து இதனை நடத்தி வருகின்றோம்.

எங்களிடம் தற்போது 8 அணிகள் உள்ளது. 

மேலும், இந்த கிரிக்கெட்டை கோலாகலமாக நடத்துவதன் நோக்கம் என்னவென்றால் இந்த உலகம் எப்படி இயங்குகின்றது, இனி எப்படி இயங்க போகிறது என்று சொன்னால் கூட்டாக சிந்திக்க வேண்டும்.

கூட்டாக செயல்பட வேண்டும். பொறியியலாளர்கள் கூட்டாக சிந்திப்பதும் கூட்டாக செயல்படுவதும்  மிகப்பெரிய வலுவாக இருக்கும்.

மாகாணத்தின் அபிவிருத்திக்கு மிகப்பெரிய பங்காற்றுவதாக இருக்கும். இவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு செயற்பாடு எங்களுக்கு தேவை. இதற்கு கிரிக்கெட் என்பது நல்லதொரு விடயம் என்பதை நாங்கள் கண்டு கொண்டுள்ளோம். 

 இதன் மூலம்  எல்லா பொறியியலாளர்களும் ஒன்றிணைப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்களை பயன்படுத்தி நாங்கள் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இதன் போது Northern Engineers Premier League இன் இலட்சனை, வெற்றிக்கேடயம், மற்றும் 8 Team இற்கான T-shirt என்பனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பொறியியலாளர்களுக்கிடையே கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்த தீர்மானம். பொறியியலாளர்களுக்கு மத்தியில் ஒரு கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை நடத்தவுள்ளதாக இலங்கை பொறியியல் நிறுவனத்தின் வடக்கின் அத்தியாயத்தை சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். நேற்றைய தினம்(26)  யாழில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் பொறியியலாளர்களுக்கு மத்தியில் "Northern Engineers Premier League" என அழைக்கப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடத்தவுள்ளோம். வழக்கமாக ஒரு கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்துவது வழமை. ஆனால் கடந்த வருடத்திலிருந்து  "Northern Engineers League" என்று சொல்லி அதனை அறிமுகப்படுத்தினோம். எங்களின் Northern Engineers இன் தலைவரை நிர்வாகியாக அடிப்படையாக கொண்டு உருவாக்கி கடந்த வருடத்திலிருந்து இதனை நடத்தி வருகின்றோம். எங்களிடம் தற்போது 8 அணிகள் உள்ளது. மேலும், இந்த கிரிக்கெட்டை கோலாகலமாக நடத்துவதன் நோக்கம் என்னவென்றால் இந்த உலகம் எப்படி இயங்குகின்றது, இனி எப்படி இயங்க போகிறது என்று சொன்னால் கூட்டாக சிந்திக்க வேண்டும். கூட்டாக செயல்பட வேண்டும். பொறியியலாளர்கள் கூட்டாக சிந்திப்பதும் கூட்டாக செயல்படுவதும்  மிகப்பெரிய வலுவாக இருக்கும். மாகாணத்தின் அபிவிருத்திக்கு மிகப்பெரிய பங்காற்றுவதாக இருக்கும். இவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு செயற்பாடு எங்களுக்கு தேவை. இதற்கு கிரிக்கெட் என்பது நல்லதொரு விடயம் என்பதை நாங்கள் கண்டு கொண்டுள்ளோம்.   இதன் மூலம்  எல்லா பொறியியலாளர்களும் ஒன்றிணைப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்களை பயன்படுத்தி நாங்கள் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் போது Northern Engineers Premier League இன் இலட்சனை, வெற்றிக்கேடயம், மற்றும் 8 Team இற்கான T-shirt என்பனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement