• Sep 19 2024

இந்திய படகுகள் இலகுவாக வருதற்கு வழிவகுத்தவர்கள் புலிகளே! அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு SamugamMedia

Chithra / Mar 14th 2023, 4:52 pm
image

Advertisement

நாட்டில் யுத்தம் இடம்பெற்றபோது கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகள் இயக்கம் அவர்களின் சில தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்திய படகுகள் இலகுவாக வந்து தொழில் செய்யக்சூடிய நிலையை ஏற்படுத்தியிருந்தாக கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

புலிகள் இருந்த காலத்தில் தமிழ் கடற் தொழிலாளர்கள் கடலில் இறங்க முடியாத நிலை இருந்தது. 

ஆனால் இன்று எமது கடற் தொழிலாளர்கள் கடலில் இறங்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்ற வேளையில், மீண்டும் இந்திய இழுவைப்படகுகளுடைய எலலை தாண்டிய, அத்துமீறிய சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகின்றபடியினால், வழங்கள் அழிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஏனென்றால், இலங்கை கடற்படை சட்ட நடவடிக்கை என்று எடுக்கின்றபொழுது, வேறு விதமாக சித்தரிக்கப்படுகின்றது. 

அதாவது, தாங்கள் தொழில் செய்கின்றபொழுது சிங்கள கடற்படையினர் அல்லது சிங்கள இராணுவத்தினர் வந்து தாக்குவதாகவும், கைது செய்வதாகவும் கூறப்படுகின்றது.

இந்திய மக்களிற்கு ஒரு தவறான படம் காட்டப்படுகின்றது. ஆனபடியால், எமது பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று அதை தடுக்கின்ற பொழுது அல்லது கடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற பொழுது தென்னிந்திய மக்களிற்கும், இந்திய மக்களிற்கும் சரியான செய்தி போய் கிடைத்து அந்த தொழிலை அவர்கள் இலகுவாக நிறுத்துவார்கள் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய படகுகள் இலகுவாக வருதற்கு வழிவகுத்தவர்கள் புலிகளே அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு SamugamMedia நாட்டில் யுத்தம் இடம்பெற்றபோது கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகள் இயக்கம் அவர்களின் சில தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்திய படகுகள் இலகுவாக வந்து தொழில் செய்யக்சூடிய நிலையை ஏற்படுத்தியிருந்தாக கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.புலிகள் இருந்த காலத்தில் தமிழ் கடற் தொழிலாளர்கள் கடலில் இறங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று எமது கடற் தொழிலாளர்கள் கடலில் இறங்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்ற வேளையில், மீண்டும் இந்திய இழுவைப்படகுகளுடைய எலலை தாண்டிய, அத்துமீறிய சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகின்றபடியினால், வழங்கள் அழிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.ஏனென்றால், இலங்கை கடற்படை சட்ட நடவடிக்கை என்று எடுக்கின்றபொழுது, வேறு விதமாக சித்தரிக்கப்படுகின்றது. அதாவது, தாங்கள் தொழில் செய்கின்றபொழுது சிங்கள கடற்படையினர் அல்லது சிங்கள இராணுவத்தினர் வந்து தாக்குவதாகவும், கைது செய்வதாகவும் கூறப்படுகின்றது.இந்திய மக்களிற்கு ஒரு தவறான படம் காட்டப்படுகின்றது. ஆனபடியால், எமது பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று அதை தடுக்கின்ற பொழுது அல்லது கடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற பொழுது தென்னிந்திய மக்களிற்கும், இந்திய மக்களிற்கும் சரியான செய்தி போய் கிடைத்து அந்த தொழிலை அவர்கள் இலகுவாக நிறுத்துவார்கள் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement