• Sep 20 2024

வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 14th 2023, 5:15 pm
image

Advertisement

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன்மூலம் வட்டி வீதத்தை குறைக்க முடியாது எனவும் வங்கி வட்டி வீதங்கள் குறித்த தீர்மானங்கள் மத்திய வங்கியுடன் தொடர்புடையவை என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பந்துல குணவர்தன, அதிகாரமற்ற விடயத்தில் தலையிடுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பது பொருத்தமற்றது என்று தெரிவித்தார்.

எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி, இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இதனை முறியடிப்பதற்காகவே ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில அரசியல் குழுக்கள் சூழ்ச்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நிலைமைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்தால், வங்கி வட்டி வீதங்களும் தானாகவே வீழ்ச்சியடையும் எனவும்  தற்போது பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது என்றும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அதற்கமைய வங்கி வட்டி வீதங்களும் கட்டுப்படுத்தப்படும் என்றும் கடன் மறுசீரமைப்பு , நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த சாதகமான சமிஞ்ஞையின் பிரதிபலனே இவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன்மூலம் வட்டி வீதத்தை குறைக்க முடியாது எனவும் வங்கி வட்டி வீதங்கள் குறித்த தீர்மானங்கள் மத்திய வங்கியுடன் தொடர்புடையவை என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பந்துல குணவர்தன, அதிகாரமற்ற விடயத்தில் தலையிடுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பது பொருத்தமற்றது என்று தெரிவித்தார்.எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி, இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதனை முறியடிப்பதற்காகவே ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில அரசியல் குழுக்கள் சூழ்ச்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், பொருளாதார நிலைமைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்தால், வங்கி வட்டி வீதங்களும் தானாகவே வீழ்ச்சியடையும் எனவும்  தற்போது பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது என்றும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய வங்கி வட்டி வீதங்களும் கட்டுப்படுத்தப்படும் என்றும் கடன் மறுசீரமைப்பு , நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த சாதகமான சமிஞ்ஞையின் பிரதிபலனே இவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement