• Apr 18 2026

இன்றும் பயங்கரமான வெப்பம் சுட்டெரிக்கும் - எச்சரிக்கையாக இருங்கள்!

shanu / Mar 31st 2026, 9:04 am
image

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  


நாடு முழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை தொடர்ச்சியாக காணப்படும். சுட்டெரிக்கும் வெப்பத்தால் பல பாதிப்புக்கள் ஏற்படலாம். 


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை எதிர்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


வெப்பத்தைத் தணிப்பதற்கு தேவையான குடிநீர் பானங்களையும் அத்துடன் அதிகளவில் வெளியில் செல்வதையும் தவிர்த்து அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் பயங்கரமான வெப்பம் சுட்டெரிக்கும் - எச்சரிக்கையாக இருங்கள் நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  நாடு முழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை தொடர்ச்சியாக காணப்படும். சுட்டெரிக்கும் வெப்பத்தால் பல பாதிப்புக்கள் ஏற்படலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை எதிர்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெப்பத்தைத் தணிப்பதற்கு தேவையான குடிநீர் பானங்களையும் அத்துடன் அதிகளவில் வெளியில் செல்வதையும் தவிர்த்து அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement