இலங்கையில் போதைப்பொருள் மற்றும் சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலரைச் சிறைச்சாலைகளில் அடைக்காமல், வீடுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிக்கும் புதிய முறைமையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் ஏனைய சிறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தேகநபர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு இலத்திரனியல் கண்காணிப்புச் சிப் பொருத்தப்பட்டு, அவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதைத் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் பொலிஸார் இணைந்து இந்தப் புதிய முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இனி சிறைக்குப் பதிலாக வீட்டுச் சிறையா அரசாங்கத்தின் புதிய திட்டம் இலங்கையில் போதைப்பொருள் மற்றும் சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலரைச் சிறைச்சாலைகளில் அடைக்காமல், வீடுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிக்கும் புதிய முறைமையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் ஏனைய சிறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தேகநபர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.புதிய திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு இலத்திரனியல் கண்காணிப்புச் சிப் பொருத்தப்பட்டு, அவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதைத் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.சிறைச்சாலைகள் திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் பொலிஸார் இணைந்து இந்தப் புதிய முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.