• Oct 21 2026

யாழில் இரவு நேர சுற்றிவளைப்பில் சிக்கிய குடும்பப் பெண் – நடந்தது என்ன?

Chithra / Oct 20th 2026, 11:55 am
image


யாழ்ப்பாணம் – சுன்னாகம் தெற்கு, கல்லாக்காட்டுவான் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று (19) இரவு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன்போது சந்தேகநபரான  29 வயதுடைய பெண்ணிடமிருந்து 1.800 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட பெண், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் இரவு நேர சுற்றிவளைப்பில் சிக்கிய குடும்பப் பெண் – நடந்தது என்ன யாழ்ப்பாணம் – சுன்னாகம் தெற்கு, கல்லாக்காட்டுவான் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (19) இரவு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது சந்தேகநபரான  29 வயதுடைய பெண்ணிடமிருந்து 1.800 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement