புத்தளம் – உடப்பு, சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (20) அதிகாலை கூம்பு வடிவிலான பாரிய இரும்புப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவப்பு நிறத்தில் காணப்படும் குறித்த இரும்புப் பொருள், சுமார் 12 அடி நீளமும் 3,000 கிலோகிராம் எடையும் கொண்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கடற்கரையில் மிதந்த நிலையில் காணப்பட்ட குறித்த பொருளை, பொதுமக்களால் கரைக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்களின் உதவியுடன் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பாரிய இரும்புப் பொருள் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.
குறித்த இரும்புப் பொருளுடன் டயர் ஒன்றும் சிறிய வலையொன்றும் இணைக்கப்பட்டுக் காணப்படுவதுடன், அதன் மேற்பரப்பில் ஆங்கில எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த மர்மப் பொருள் ஆழ்கடலில் பயணிக்கும் கப்பல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த பொருள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது, அது எங்கிருந்து கடலில் மிதந்து வந்தது என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடலில் மிதந்து வந்த பாரிய மர்மப் பொருள் புத்தளத்தில் அதிகாலை பரபரப்பு புத்தளம் – உடப்பு, சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (20) அதிகாலை கூம்பு வடிவிலான பாரிய இரும்புப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவப்பு நிறத்தில் காணப்படும் குறித்த இரும்புப் பொருள், சுமார் 12 அடி நீளமும் 3,000 கிலோகிராம் எடையும் கொண்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.இன்று அதிகாலை கடற்கரையில் மிதந்த நிலையில் காணப்பட்ட குறித்த பொருளை, பொதுமக்களால் கரைக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, அப்பகுதி மக்களின் உதவியுடன் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பாரிய இரும்புப் பொருள் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.குறித்த இரும்புப் பொருளுடன் டயர் ஒன்றும் சிறிய வலையொன்றும் இணைக்கப்பட்டுக் காணப்படுவதுடன், அதன் மேற்பரப்பில் ஆங்கில எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த மர்மப் பொருள் ஆழ்கடலில் பயணிக்கும் கப்பல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.எனினும், குறித்த பொருள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது, அது எங்கிருந்து கடலில் மிதந்து வந்தது என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.