• Oct 20 2026

எரிவாயு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி? அடுத்தடுத்து இலங்கை வரும் கப்பல்கள்!

Chithra / Oct 20th 2026, 12:27 pm
image


நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினைகளைச் சீர்செய்யும் நோக்கில், புதிய எரிவாயுத் தொகுதிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதன்படி, 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவந்த 'FRANCOIS' கப்பல் நேற்று முன்தினம் (18) இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதனிடையே, மேலும் 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவரும் நான்காவது கப்பலான 'CORINTHIAN', எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த எரிவாயுத் தொகுதிகள் கிடைக்கப்பெற்றதும், நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முழுமையாகச் சீரமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


அத்துடன், சந்தைக்குத் தேவையான எரிவாயுவை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எரிவாயு விநியோகம் விரைவில் வழமைக்குத் திரும்பும் எனவும் நுகர்வோருக்கு அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

எரிவாயு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி அடுத்தடுத்து இலங்கை வரும் கப்பல்கள் நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினைகளைச் சீர்செய்யும் நோக்கில், புதிய எரிவாயுத் தொகுதிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவந்த 'FRANCOIS' கப்பல் நேற்று முன்தினம் (18) இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே, மேலும் 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவரும் நான்காவது கப்பலான 'CORINTHIAN', எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த எரிவாயுத் தொகுதிகள் கிடைக்கப்பெற்றதும், நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முழுமையாகச் சீரமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அத்துடன், சந்தைக்குத் தேவையான எரிவாயுவை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எரிவாயு விநியோகம் விரைவில் வழமைக்குத் திரும்பும் எனவும் நுகர்வோருக்கு அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement