• Jan 01 2025

ஜனாதிபதி ரணிலுடன் தமிழரசுக் கட்சியின் குழுவொன்று விசேட சந்திப்பு!

Chithra / Sep 8th 2024, 9:10 am
image

 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அகிலன் முத்துக்குமாரசாமி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான மயூரன், சுதர்சன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன், குணாளன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

குறித்த சந்திப்பில் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் விரிவான பேச்சில் ஈடுபட்டதாகவும் விசேடமாக சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருந்ததாகவும் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த நிலையில் அக்கட்சியின் குழுவினர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.


ஜனாதிபதி ரணிலுடன் தமிழரசுக் கட்சியின் குழுவொன்று விசேட சந்திப்பு  இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு சந்தித்து கலந்துரையாடினார்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அகிலன் முத்துக்குமாரசாமி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான மயூரன், சுதர்சன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன், குணாளன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.குறித்த சந்திப்பில் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் விரிவான பேச்சில் ஈடுபட்டதாகவும் விசேடமாக சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருந்ததாகவும் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.இலங்கை தமிழ் அரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த நிலையில் அக்கட்சியின் குழுவினர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement