• Nov 25 2024

யாழ். நீதிமன்றில் தமிழரசு கட்சிக்கு எதிராக வழக்கு - முடக்கப்படுமா கட்சி

Tharmini / Oct 14th 2024, 4:42 pm
image

இன்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய  வழக்கொன்றை   யாழ். நீதிமன்றில் தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா அவர்கள் சமர்ப்பித்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதாவது தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் யாப்பின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுச்சபை கூட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுச்சபை கூட்டப்படவில்லை எனவும் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழரசு கட்சியில் சிலரின் எதேச்சதிகாரம் மிக்க செயற்பாடுகள் தலைவிரித்தாடி வருகின்ற நிலையில் பலர் அந்த கட்சியை விட்டு வெளியேறியும், பதவிகளை துறந்த வண்ணமும் உள்ளனர். 

இவ்வாறான சூழ்நிலையில் அக் உறுப்பினரால் இந்த வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாவை சேனாதிராஜா, ப.சத்தியலிங்கம், சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் அரசுக் கட்சியை இந்த வழக்குகள் பாதிப்படையச் செய்யும் என கருதப்படுகிறது.

யாழ். நீதிமன்றில் தமிழரசு கட்சிக்கு எதிராக வழக்கு - முடக்கப்படுமா கட்சி இன்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய  வழக்கொன்றை   யாழ். நீதிமன்றில் தமிழ் அரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா அவர்கள் சமர்ப்பித்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.அதாவது தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் யாப்பின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுச்சபை கூட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுச்சபை கூட்டப்படவில்லை எனவும் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.தமிழரசு கட்சியில் சிலரின் எதேச்சதிகாரம் மிக்க செயற்பாடுகள் தலைவிரித்தாடி வருகின்ற நிலையில் பலர் அந்த கட்சியை விட்டு வெளியேறியும், பதவிகளை துறந்த வண்ணமும் உள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அக் உறுப்பினரால் இந்த வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாவை சேனாதிராஜா, ப.சத்தியலிங்கம், சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் அரசுக் கட்சியை இந்த வழக்குகள் பாதிப்படையச் செய்யும் என கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement