ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான மாதாந்த கலந்துரையாடல் இன்று (08.08.2026) இடம்பெற்றது.
யாழ் மாநகர சபைக்கான மாதாந்த அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், வட்டாரங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டதன.
குறிப்பாக, மாநகர குப்பைகள் கொட்டப்படுவதால் 10 ஆம் வட்டார மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினைகளுக்கு இதவரை திருப்திகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பாக விசனம் வெளிப்படுத்தப்பதுடன், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி டி .பி. முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
குறித்த விவகாரம் தொடர்பாக அடுத்த சபை அமர்வில் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவினால் விசேட பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
யாழ் மாநகர கழிவகற்றல் பிரச்சினைக்கு திருப்திகரமான நடவடிக்கை இல்லை - ஈ.பி.டி.பி. கூட்டத்தில் விசனம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர வட்டாரப் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான மாதாந்த கலந்துரையாடல் இன்று (08.08.2026) இடம்பெற்றது.யாழ் மாநகர சபைக்கான மாதாந்த அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், வட்டாரங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டதன.குறிப்பாக, மாநகர குப்பைகள் கொட்டப்படுவதால் 10 ஆம் வட்டார மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினைகளுக்கு இதவரை திருப்திகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பாக விசனம் வெளிப்படுத்தப்பதுடன், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி டி .பி. முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.குறித்த விவகாரம் தொடர்பாக அடுத்த சபை அமர்வில் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவினால் விசேட பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.