• Nov 22 2024

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் விழிப்புணர்வு வேலைத் திட்டம் - வைத்தியர் கேதீஸ்வரன் கருத்து

Anaath / Oct 9th 2024, 4:24 pm
image

யாழ். மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களை விட இவ்வாண்டு டெங்கு நோய் கட்டுப்பாட்டில்  உள்ளது என யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இவ் ஆண்டு கடந்த ஐந்து வருடங்களைவிட  மிகவும் குறைந்தளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

மேலும் யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு மிகமோசமான டெங்கு நோய்த் தாக்கம் காணப்பட்டது .

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும்  டிசெம்பர் மாதங்களில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. 

மேலும் இவ் ஆண்டு ஆரம்பத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. எனினும் இவ் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் டெங்கு நோய்த் தாக்கம் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

இதுதவிர கடந்த ஆண்டு டெங்கு நோயால் ஆறு மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

எனினும் இவ் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரையான காலப் பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. 

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  179 பேர் நோய்த் தாக்கத்துக்கு மேலும் டிசம்பர் மாதத்தில் 2180 பேர் டெங்கு நோப்யால் பாதிக்கப்பட்டனர் .

இந்த ஆண்டு ஐனவரி மாதத்தில் 2816 டெங்கு நோய்யாளர்களும் பெப்பிரவரி மரதத்தில் 1409 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பபட்டடனர். 

இவ்வாண்டு மார்ச் மாதத்துடன் டெங்கு நோய்த் தாக்கம் படிப்படியாகக் குறைந்துள்ளது.  

கடந்த ஐந்து வருடங்களைவிட மிகவும் குறைந்தளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளர்கள். 

தற்போது பருவப்பொயர்ச்சி மழை ஆரம்பமாகி உள்ளதால் டெங்கு நோய்த்தாக்கம் மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் அரசதிணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், மத வழிபாட்டிடங்கள்  மற்றும் அனைத்துப் பொது இடங்களையும் துப்பரவாக வைத்திருத்தல் வேண்டும். 

யாழ். மாவட்டத்தில்  யாழ். மாநகர சபைக்கு உட்டபட்ட பிரதேசங்கள் இம்மாதம் 13 ஆம் திகதி சமூகமட்டத்தில் டெங்கு ஒழிப்பு திட்டத்ததை சிரமதானம் முலம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலங்களும் இம்மாதம் 14 ஆம் திகதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொள்ள வேண்டும். 

பாடசாலைகளில் இம்மாதம் 15 ஆம் திகதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் கேதீஸ்வரன் பிரதேச  செயளர் மட்ட மற்றும் கிராமமட்ட டெங்குத் தடுப்புத் என்பவற்றை  முறையான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுத்தவேண்டும். 

ஒவ்வெரு வாரமும் கிராமங்கள் மதத்தலங்கள் மற்றும் பொது இடங்கள் சிரமதானம் செய்வதன் ஊடாகச் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம் என்றும் கூறினார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் டெங்கு நோய்ப் பரவல் காலை வேளையில் 6 தொடக்கம் 9 மணிவரையான காலப்பகுதியிலும் மாலை வேளையில் 3 தொடக்கம் 6 மணிவரையான  காலப்பகுதியிலும் கடிக்கும் நுளம்புகளால் அதிகம்  நோய்த்தாக்கம் ஏற்படுகிறது.

மேலும் இவ்வாண்டு டெங்கு நோய்த்தாக்கம் கடந்த ஆண்டைவிட மிகவும் குறைவாகவும் காணப்படுகிறது. இவ்வாண்டு டெங்குநேய்த்தாகக்கம் இதுவரை கட்டுப்பாட்டில் உள்ளது.

எனினும்  தற்போது பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகி உள்ளதால் மக்கள் தமது வீடுகள் மற்றும் பொது இடங்கள் திணைக்களங்கள் மதத்தலங்கள் என்பவற்றை துப்பரவாக வைத்திருத்தல் வேண்டும். 

பாடசாலைகளில்  வாரத்தில் ஒருநாள் 1 மணித்தியாலம் சிரமதானம் மேற்கொள்ள வேண்டும். மற்றும் வேலைத் தளங்களில் ஒவ்வொரு வாரமும் சுத்திகரிப்புப் பணி மேற்கொள்ளப்படவேண்டும் .


யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் விழிப்புணர்வு வேலைத் திட்டம் - வைத்தியர் கேதீஸ்வரன் கருத்து யாழ். மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களை விட இவ்வாண்டு டெங்கு நோய் கட்டுப்பாட்டில்  உள்ளது என யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ் ஆண்டு கடந்த ஐந்து வருடங்களைவிட  மிகவும் குறைந்தளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்மேலும் யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு மிகமோசமான டெங்கு நோய்த் தாக்கம் காணப்பட்டது . கடந்த ஆண்டு நவம்பர் மற்றும்  டிசெம்பர் மாதங்களில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. மேலும் இவ் ஆண்டு ஆரம்பத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. எனினும் இவ் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் டெங்கு நோய்த் தாக்கம் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்இதுதவிர கடந்த ஆண்டு டெங்கு நோயால் ஆறு மரணங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் இவ் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரையான காலப் பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  179 பேர் நோய்த் தாக்கத்துக்கு மேலும் டிசம்பர் மாதத்தில் 2180 பேர் டெங்கு நோப்யால் பாதிக்கப்பட்டனர் .இந்த ஆண்டு ஐனவரி மாதத்தில் 2816 டெங்கு நோய்யாளர்களும் பெப்பிரவரி மரதத்தில் 1409 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பபட்டடனர். இவ்வாண்டு மார்ச் மாதத்துடன் டெங்கு நோய்த் தாக்கம் படிப்படியாகக் குறைந்துள்ளது.  கடந்த ஐந்து வருடங்களைவிட மிகவும் குறைந்தளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளர்கள். தற்போது பருவப்பொயர்ச்சி மழை ஆரம்பமாகி உள்ளதால் டெங்கு நோய்த்தாக்கம் மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.பொதுமக்கள் அரசதிணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், மத வழிபாட்டிடங்கள்  மற்றும் அனைத்துப் பொது இடங்களையும் துப்பரவாக வைத்திருத்தல் வேண்டும். யாழ். மாவட்டத்தில்  யாழ். மாநகர சபைக்கு உட்டபட்ட பிரதேசங்கள் இம்மாதம் 13 ஆம் திகதி சமூகமட்டத்தில் டெங்கு ஒழிப்பு திட்டத்ததை சிரமதானம் முலம் மேற்கொள்ள வேண்டும்.மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலங்களும் இம்மாதம் 14 ஆம் திகதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொள்ள வேண்டும். பாடசாலைகளில் இம்மாதம் 15 ஆம் திகதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் கேதீஸ்வரன் பிரதேச  செயளர் மட்ட மற்றும் கிராமமட்ட டெங்குத் தடுப்புத் என்பவற்றை  முறையான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுத்தவேண்டும். ஒவ்வெரு வாரமும் கிராமங்கள் மதத்தலங்கள் மற்றும் பொது இடங்கள் சிரமதானம் செய்வதன் ஊடாகச் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம் என்றும் கூறினார்.மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் டெங்கு நோய்ப் பரவல் காலை வேளையில் 6 தொடக்கம் 9 மணிவரையான காலப்பகுதியிலும் மாலை வேளையில் 3 தொடக்கம் 6 மணிவரையான  காலப்பகுதியிலும் கடிக்கும் நுளம்புகளால் அதிகம்  நோய்த்தாக்கம் ஏற்படுகிறது.மேலும் இவ்வாண்டு டெங்கு நோய்த்தாக்கம் கடந்த ஆண்டைவிட மிகவும் குறைவாகவும் காணப்படுகிறது. இவ்வாண்டு டெங்குநேய்த்தாகக்கம் இதுவரை கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும்  தற்போது பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகி உள்ளதால் மக்கள் தமது வீடுகள் மற்றும் பொது இடங்கள் திணைக்களங்கள் மதத்தலங்கள் என்பவற்றை துப்பரவாக வைத்திருத்தல் வேண்டும். பாடசாலைகளில்  வாரத்தில் ஒருநாள் 1 மணித்தியாலம் சிரமதானம் மேற்கொள்ள வேண்டும். மற்றும் வேலைத் தளங்களில் ஒவ்வொரு வாரமும் சுத்திகரிப்புப் பணி மேற்கொள்ளப்படவேண்டும் .

Advertisement

Advertisement

Advertisement