• Oct 26 2024

யாழ் இந்தியத் துணை தூதுவரால் வடக்கு ஆளுநருக்கு நூல் வழங்கிவைப்பு..!

Sharmi / Oct 25th 2024, 9:46 am
image

Advertisement

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரினால் கையளிக்கப்பட்ட நூல் ஒன்று யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவரால் வடக்கு ஆளுநர் வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.

"ஒரு சிறந்த நாளைக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல்" என்னும் ஹிந்தி மொழியில்  உருவாக்கப்பட்ட  நூல், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(24) யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் உதவி துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் நடைபெற்றது.

இவ் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூலினை பெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், இந்திய துணைத்தூதர் சாய் முரளியிடம் இருந்து நூலினை பெற்றுக் கொண்டார்.



யாழ் இந்தியத் துணை தூதுவரால் வடக்கு ஆளுநருக்கு நூல் வழங்கிவைப்பு. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரினால் கையளிக்கப்பட்ட நூல் ஒன்று யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவரால் வடக்கு ஆளுநர் வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது."ஒரு சிறந்த நாளைக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல்" என்னும் ஹிந்தி மொழியில்  உருவாக்கப்பட்ட  நூல், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(24) யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் உதவி துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் நடைபெற்றது.இவ் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூலினை பெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், இந்திய துணைத்தூதர் சாய் முரளியிடம் இருந்து நூலினை பெற்றுக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement