யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு இணைந்து கொள்வதற்கு யாழ் இந்துக் கல்லூரி உத்தியோகபூர்வமாக முகநூல் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது.
விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதி வசதி மற்றும் ஏனைய பொருளாதார வசதிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் இந்துக் கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாக விண்ணப்பங்களுக்கான இணைப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
டிசம்பர் 08ம் திகதி விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டிய இறுதித் திகதியாகும்.
எனவே யாழ் இந்து கல்லூரியில் உயர்தர கற்கை நெறியை தொடர விரும்பும் மாணவர்கள் யாழ் இந்து கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழ்.இந்து கல்லூரியில் உயர்தர கல்வியை தொடர வெளிமாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு இணைந்து கொள்வதற்கு யாழ் இந்துக் கல்லூரி உத்தியோகபூர்வமாக முகநூல் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது.விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க முன்னுரிமை அடிப்படையில் மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதி வசதி மற்றும் ஏனைய பொருளாதார வசதிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ் இந்துக் கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாக விண்ணப்பங்களுக்கான இணைப்பை பெற்றுக் கொள்ள முடியும்.டிசம்பர் 08ம் திகதி விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டிய இறுதித் திகதியாகும்.எனவே யாழ் இந்து கல்லூரியில் உயர்தர கற்கை நெறியை தொடர விரும்பும் மாணவர்கள் யாழ் இந்து கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.