• May 19 2024

உயர்தர பரீட்சைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! கல்வி அமைச்சர் தகவல்

Chithra / Dec 2nd 2023, 8:29 am
image

Advertisement

 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி 245,521 மாணவர்கள் 72.07% உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் இந்த வருடம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 

அந்த வருடம் 62.63% பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், இந்த வருடம் 72.07% ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடம் 472,553 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும் முடிவுகளின்படி, அனைத்து பாடங்களிலும் 9 'ஏ' சித்திகளையும் பெற்ற 13,588 மாணவர்கள் உள்ளதாகவும், இது சதவீதத்தில் 3.39% என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த வருடம் 11,053 மாணவர்கள் சகல பாடங்களிலும் 'ஏ' சித்தியடைந்துள்ளதாகவும், இது சதவீதமாக 3.31% எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதவேளை, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொழில்சார் நடவடிக்கையினால் 3 மாதங்கள் தாமதமானதாகவும், இதன் காரணமாக சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உயர்தர பரீட்சைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கல்வி அமைச்சர் தகவல்  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி 245,521 மாணவர்கள் 72.07% உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு, கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் இந்த வருடம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வருடம் 62.63% பேர் தகுதி பெற்றுள்ளதாகவும், இந்த வருடம் 72.07% ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வருடம் 472,553 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும் முடிவுகளின்படி, அனைத்து பாடங்களிலும் 9 'ஏ' சித்திகளையும் பெற்ற 13,588 மாணவர்கள் உள்ளதாகவும், இது சதவீதத்தில் 3.39% என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், கடந்த வருடம் 11,053 மாணவர்கள் சகல பாடங்களிலும் 'ஏ' சித்தியடைந்துள்ளதாகவும், இது சதவீதமாக 3.31% எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.அதவேளை, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொழில்சார் நடவடிக்கையினால் 3 மாதங்கள் தாமதமானதாகவும், இதன் காரணமாக சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement