• May 12 2024

யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்கு அடித்த அதிஸ்டம் - 500 மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு

harsha / Dec 12th 2022, 3:35 pm
image

Advertisement

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துத் துறையின் ‘AHEAD’ செயற்றிட்டத்தின் கீழ், தொழிற்றுறைத் தொடர்பு மையம் மற்றும் தொழில் வழிகாட்டல் அலகு ஆகியவை இணைந்து நடாத்தும் இந்தத் தொழில் வாய்ப்பு சந்தை – 2022 க்கான சகல போதுமானதும், பொருத்தமானதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், இத்  தெழில்வாய்ப்பு சந்தையின் பிரதான நோக்கமாக அமைவது நான்காம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்பைப் (Internship Opportunities) பெற்றுக் கொடுப்பதாகும். இந்தத் தொழில் வாய்ப்புச் சந்தையில் கணக்கியல், நிதியியல், மனிதவள, சந்தைப்படுத்தல், வணிகத் தொழிநுட்பம் , தொடர்பாடல் மற்றும் ஆடை உற்பத்திகளில் ஈடுபடும் சுமார் 20 தொழில்வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமது தொழில் வாய்ப்புகள் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந் நிகழ்வின் ஓர் அங்கமாக மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை மற்றும் சுயவிபரக்கோவை என்பவற்றை எவ்வாறு சிறந்தமுறையில் ஒழுங்கமைத்து வெற்றியடைவது தொடர்பான செயலமர்வு ஒன்று இலங்கை ஆளணி பட்டய நிறுவனம் (CIPM) ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், சமீபத்தில் தமது பீடத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் தொழிற்றுறை நிறுவனங்களுடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர்புகளை விருத்தி செய்தல் என்பன இத் தொழில் வாய்ப்புச் சந்தையின் துணை நோக்கங்களாகக் காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்கு அடித்த அதிஸ்டம் - 500 மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துத் துறையின் ‘AHEAD’ செயற்றிட்டத்தின் கீழ், தொழிற்றுறைத் தொடர்பு மையம் மற்றும் தொழில் வழிகாட்டல் அலகு ஆகியவை இணைந்து நடாத்தும் இந்தத் தொழில் வாய்ப்பு சந்தை – 2022 க்கான சகல போதுமானதும், பொருத்தமானதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தெரிவித்துள்ளார்.இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், இத்  தெழில்வாய்ப்பு சந்தையின் பிரதான நோக்கமாக அமைவது நான்காம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களுக்கான பயிற்சி வாய்ப்பைப் (Internship Opportunities) பெற்றுக் கொடுப்பதாகும். இந்தத் தொழில் வாய்ப்புச் சந்தையில் கணக்கியல், நிதியியல், மனிதவள, சந்தைப்படுத்தல், வணிகத் தொழிநுட்பம் , தொடர்பாடல் மற்றும் ஆடை உற்பத்திகளில் ஈடுபடும் சுமார் 20 தொழில்வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமது தொழில் வாய்ப்புகள் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிகழ்வின் ஓர் அங்கமாக மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை மற்றும் சுயவிபரக்கோவை என்பவற்றை எவ்வாறு சிறந்தமுறையில் ஒழுங்கமைத்து வெற்றியடைவது தொடர்பான செயலமர்வு ஒன்று இலங்கை ஆளணி பட்டய நிறுவனம் (CIPM) ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், சமீபத்தில் தமது பீடத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் தொழிற்றுறை நிறுவனங்களுடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர்புகளை விருத்தி செய்தல் என்பன இத் தொழில் வாய்ப்புச் சந்தையின் துணை நோக்கங்களாகக் காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement