• Nov 22 2025

மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் போட்டியில் யாழ். இளைஞன் -இலங்கையிலிருந்து முதல்முறை பங்கேற்ற பிலிப்பைன்ஸ் பயணம்!

dileesiya / Nov 22nd 2025, 5:47 pm
image

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபலமான மாடல் ஹரண் ரமின்ஷன், பிலிப்பைன்ஸில் நடைபெறும் 2025 மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் மாடலிங் போட்டியில் பங்களாதேஷ் பிரதிநிதியாக பங்கு பெறவுள்ளார்.

இந்தப் போட்டி உலகளாவிய அளவில் ஆண்மை, நேர்த்தி, கலாச்சாரம் மற்றும் நவீன ஸ்டைல்களை முன்னிறுத்தும் முக்கியமான மேடையாக விளங்குகின்றது.  

ஹரண் ரமின்ஷன், இப்போட்டியில் பங்கேற்க இன்று அதிகாலை 12:40 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து பிலிப்பைன்ஸ் மனிலாவிற்கு புறப்பட்டுள்ளார். 

இவரே யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முதலாக குறித்த போட்டியில் பங்கேற்கின்றார்.

இந்த போட்டியின் சுற்றுக்கள் மனிலா நகரில் நவம்பர் 23 முதல் நவம்பர் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

2025 மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் போட்டியில் உலகம் முழுவதிலிருந்து 35க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆண்கள் பங்கேற்கின்றனர். 

ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான திறமைகள், ஆளுமை, கலாச்சார அடையாளம் மற்றும் ஆண்மை குணங்களை வெளிப்படுத்துவர்.  

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் ஆண் மாடல் உலகளாவிய கவனம் பெற்றுக் கொள்வதுடன்   புதிய  வாய்ப்புகளையும்  பெறுவார் என நம்பப்படுகின்றது. 

இந்த நிகழ்ச்சி, உலகம் முழுவதிலிருந்தும்  ஆண்களை முன்னிலைப்படுத்தி, ஒவ்வொருவரும் தங்களது கதை, வலிமை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் தருணமாகும்.



மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் போட்டியில் யாழ். இளைஞன் -இலங்கையிலிருந்து முதல்முறை பங்கேற்ற பிலிப்பைன்ஸ் பயணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபலமான மாடல் ஹரண் ரமின்ஷன், பிலிப்பைன்ஸில் நடைபெறும் 2025 மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் மாடலிங் போட்டியில் பங்களாதேஷ் பிரதிநிதியாக பங்கு பெறவுள்ளார்.இந்தப் போட்டி உலகளாவிய அளவில் ஆண்மை, நேர்த்தி, கலாச்சாரம் மற்றும் நவீன ஸ்டைல்களை முன்னிறுத்தும் முக்கியமான மேடையாக விளங்குகின்றது.  ஹரண் ரமின்ஷன், இப்போட்டியில் பங்கேற்க இன்று அதிகாலை 12:40 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து பிலிப்பைன்ஸ் மனிலாவிற்கு புறப்பட்டுள்ளார். இவரே யாழ்ப்பாணத்திலிருந்து முதன் முதலாக குறித்த போட்டியில் பங்கேற்கின்றார்.இந்த போட்டியின் சுற்றுக்கள் மனிலா நகரில் நவம்பர் 23 முதல் நவம்பர் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  2025 மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் போட்டியில் உலகம் முழுவதிலிருந்து 35க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆண்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான திறமைகள், ஆளுமை, கலாச்சார அடையாளம் மற்றும் ஆண்மை குணங்களை வெளிப்படுத்துவர்.  இந்தப் போட்டியில் வெற்றி பெறும் ஆண் மாடல் உலகளாவிய கவனம் பெற்றுக் கொள்வதுடன்   புதிய  வாய்ப்புகளையும்  பெறுவார் என நம்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி, உலகம் முழுவதிலிருந்தும்  ஆண்களை முன்னிலைப்படுத்தி, ஒவ்வொருவரும் தங்களது கதை, வலிமை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் தருணமாகும்.

Advertisement

Advertisement

Advertisement