• Mar 11 2025

புதிய இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர பதவி பிரமாணம்..!samugammedia

mathuri / Feb 20th 2024, 9:34 pm
image

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இது தவிர, ஜானக வக்கும்புர மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு வருகிறார். 

சுற்றாடல் அமைச்சின் அமைச்சரவை அமைச்சுப் பதவியை இதற்கு முன்னதாக கெஹெலிய ரம்புக்வெல்ல வகித்து வந்தார். சர்ச்சைக்குரிய முறையில் மருந்து இறக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹெகலிய விளக்க மறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்திருந்ததை அடுத்து சுற்றாடல் அமைப்பு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் சுற்றாடல் துறையின் இராஜாங்க அமைச்சு ஜானக வக்கும்புரவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

புதிய இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர பதவி பிரமாணம்.samugammedia சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இது தவிர, ஜானக வக்கும்புர மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு வருகிறார். சுற்றாடல் அமைச்சின் அமைச்சரவை அமைச்சுப் பதவியை இதற்கு முன்னதாக கெஹெலிய ரம்புக்வெல்ல வகித்து வந்தார். சர்ச்சைக்குரிய முறையில் மருந்து இறக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹெகலிய விளக்க மறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்திருந்ததை அடுத்து சுற்றாடல் அமைப்பு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் சுற்றாடல் துறையின் இராஜாங்க அமைச்சு ஜானக வக்கும்புரவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement