• Nov 19 2024

ஜப்பானிய நிறுவனம் நீதிமன்றில் மனு தாக்கல்!

Tamil nila / Aug 29th 2024, 8:37 pm
image

இலங்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர்கள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்படுமா, இல்லையா? என்பது தொடர்பான உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி வெளியிடுவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காலி பிரதேசத்தில் ஹோட்டல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கையில் முதலீடு செய்ய வந்த ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் முன்மொழியப்பட்ட 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்த நம்பிக்கை மீறல் தொடர்பில் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பிலேயே நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.

ஜப்பானிய நிறுவனமான சி.சி.ட்ரஸ்ட் தனியார் நிறுவனம் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளதுடன், அதனை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திருமதி. தனுஜா ஜயசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டிசம்பர் 03, 2017 அன்று ஹோட்டல் திட்டத்தை முடிப்பதாக பிரதிவாதி நிறுவனம் உறுதியளித்த போதிலும், பிரதிவாதி நிறுவனம் திட்டத்தை முடிக்கவில்லை என்றும், அதன் மூலம் குற்றவியல் சட்டம் பிரிவு 398 மற்றும் 403 இல் குறிப்பிடப்பட்டுள்ள பணம் தொடர்பான நம்பிக்கை மீறல் குற்றங்களை அவர்கள் செய்துள்ளதாகவும் தொடர்புடைய தனியார் நிறுவனம் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான நிரஞ்சன் அருள்பிரகாசம் மற்றும் நந்தன பெரேரா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன்னிலையாகி இருந்தார்.


ஜப்பானிய நிறுவனம் நீதிமன்றில் மனு தாக்கல் இலங்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர்கள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி வெளியிடுவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.காலி பிரதேசத்தில் ஹோட்டல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கையில் முதலீடு செய்ய வந்த ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் முன்மொழியப்பட்ட 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்த நம்பிக்கை மீறல் தொடர்பில் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பிலேயே நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.ஜப்பானிய நிறுவனமான சி.சி.ட்ரஸ்ட் தனியார் நிறுவனம் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளதுடன், அதனை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திருமதி. தனுஜா ஜயசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.டிசம்பர் 03, 2017 அன்று ஹோட்டல் திட்டத்தை முடிப்பதாக பிரதிவாதி நிறுவனம் உறுதியளித்த போதிலும், பிரதிவாதி நிறுவனம் திட்டத்தை முடிக்கவில்லை என்றும், அதன் மூலம் குற்றவியல் சட்டம் பிரிவு 398 மற்றும் 403 இல் குறிப்பிடப்பட்டுள்ள பணம் தொடர்பான நம்பிக்கை மீறல் குற்றங்களை அவர்கள் செய்துள்ளதாகவும் தொடர்புடைய தனியார் நிறுவனம் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான நிரஞ்சன் அருள்பிரகாசம் மற்றும் நந்தன பெரேரா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா முன்னிலையாகி இருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement