• Mar 15 2026

ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதிநிதிகள் குழு

dorin / Mar 14th 2026, 6:14 pm
image

இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேரடங்கிய ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவினர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட சென்றுள்ளனர்.

இலங்கையின் வரலாறு, பௌத்த மதத்தின் வருகை மற்றும் அதன் பரவல், பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், பாரம்பரிய சடங்குகள், உணவு முறைகள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிந்துகொள்வதே இந்தத் தூதுக்குழுவின் நோக்கமாகும்.

இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடிய அவர்கள், தாம் பெற்றுக்கொண்ட அறிவை ஜப்பானிய மக்களுடன் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், ஜப்பானில் இலங்கையை ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், கொழும்பு, அனுராதபுரம், சிகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சப்புகஸ்கந்த புராதன விகாரை, மிஹிந்தலை, அனுராதபுரம், சிகிரியா, தம்பானை, மல்வத்து மகா விகாரை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர்.


ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதிநிதிகள் குழு இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேரடங்கிய ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவினர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட சென்றுள்ளனர்.இலங்கையின் வரலாறு, பௌத்த மதத்தின் வருகை மற்றும் அதன் பரவல், பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், பாரம்பரிய சடங்குகள், உணவு முறைகள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிந்துகொள்வதே இந்தத் தூதுக்குழுவின் நோக்கமாகும்.இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடிய அவர்கள், தாம் பெற்றுக்கொண்ட அறிவை ஜப்பானிய மக்களுடன் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.அத்துடன், ஜப்பானில் இலங்கையை ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், கொழும்பு, அனுராதபுரம், சிகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்தத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சப்புகஸ்கந்த புராதன விகாரை, மிஹிந்தலை, அனுராதபுரம், சிகிரியா, தம்பானை, மல்வத்து மகா விகாரை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement