தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி இன்று (05) திடீர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் செய்தி திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்த இவர், தென்னிந்திய சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராக திகழ்ந்தார். குறிப்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை வழங்கியவர்.
புதுவசந்தம், நாட்டாமை, சூரியவம்சம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் அவரின் தயாரிப்பில் வெளிவந்தவை. புதிய முகங்கள் மற்றும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கியவர் என்ற தனித்துவத்தையும் அவர் பெற்றிருந்தார்.
1990களிலிருந்து தொடங்கி நீண்ட காலமாக சினிமா துறையில் செயல்பட்டு வந்த ஆர்.பி. சௌத்ரியின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜீவாவின் தந்தை ஆர்.பி. சௌத்ரி விபத்தில் பலி - துக்கத்தில் திரையுலகம் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி இன்று (05) திடீர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் செய்தி திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்த இவர், தென்னிந்திய சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராக திகழ்ந்தார். குறிப்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை வழங்கியவர்.புதுவசந்தம், நாட்டாமை, சூரியவம்சம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் அவரின் தயாரிப்பில் வெளிவந்தவை. புதிய முகங்கள் மற்றும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கியவர் என்ற தனித்துவத்தையும் அவர் பெற்றிருந்தார்.1990களிலிருந்து தொடங்கி நீண்ட காலமாக சினிமா துறையில் செயல்பட்டு வந்த ஆர்.பி. சௌத்ரியின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.