• May 10 2025

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம்- கைதுசெய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர் பிணையில் விடுதலை

Chithra / Jan 12th 2024, 2:16 pm
image

 


வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று(12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.


இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.


கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர். 


இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் அன்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.


இந்நிலையில் குறித்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்கத்தின் தலைவியை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டார்.


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சி.ஜெனிற்றா,


“நாங்கள் எந்தவிதமான வன்முறைகளையும்  மேற்கொள்ளவில்லை. 


அரச சொத்துக்களை சேதப்படுத்தவில்லை, வீதியினை மறிக்கவில்லை. ஆனால் காவல்துறையினர் எங்களை பெண்கள் என்றும் பார்க்காது அநாகரிகமான முறையிலேயே கைதுசெய்தனர்.


கொலைக்குற்றங்களை செய்தவர்களை கூட இப்படி நடாத்தியிருக்கமாட்டார்கள். 


இது எமக்கு மனவருத்தமாக உள்ளது. நீதிக்கான குரல்களை நசுக்கும் வன்மையான செயற்பாடகாவே நாம் இதனை பார்க்கின்றோம். என்றார்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம்- கைதுசெய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர் பிணையில் விடுதலை  வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று(12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர். இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் அன்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் குறித்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்கத்தின் தலைவியை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டார்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சி.ஜெனிற்றா,“நாங்கள் எந்தவிதமான வன்முறைகளையும்  மேற்கொள்ளவில்லை. அரச சொத்துக்களை சேதப்படுத்தவில்லை, வீதியினை மறிக்கவில்லை. ஆனால் காவல்துறையினர் எங்களை பெண்கள் என்றும் பார்க்காது அநாகரிகமான முறையிலேயே கைதுசெய்தனர்.கொலைக்குற்றங்களை செய்தவர்களை கூட இப்படி நடாத்தியிருக்கமாட்டார்கள். இது எமக்கு மனவருத்தமாக உள்ளது. நீதிக்கான குரல்களை நசுக்கும் வன்மையான செயற்பாடகாவே நாம் இதனை பார்க்கின்றோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now