• Apr 16 2026

சஜித்துடன் இணைவது உறுதி முடிவல்ல..! திடீரென பல்டி அடிக்கும் டலஸ் அணி

Chithra / Jan 2nd 2024, 1:15 pm
image

 

எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, 

நாங்கள் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என தெரிவித்தார்.

அண்மையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து பிரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடி எதிர்வரும் அதிபர் தேர்தலை கருத்திற்கொண்டு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கையை அறிவித்தனர்.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்றைய தினம்  உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சஜித்துடன் இணைவது உறுதி முடிவல்ல. திடீரென பல்டி அடிக்கும் டலஸ் அணி  எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, நாங்கள் உத்தியோகபூர்வமாக கட்சியில் இணையவில்லை என தெரிவித்தார்.அண்மையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து பிரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடி எதிர்வரும் அதிபர் தேர்தலை கருத்திற்கொண்டு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கையை அறிவித்தனர்.இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்றைய தினம்  உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement