• Dec 29 2024

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது கடும் தாக்குதல்

Chithra / Dec 27th 2024, 7:48 am
image

 

கிளிநொச்சியில் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்கள் ஊடகவியலாளர்  தமிழ்ச்செல்வனை கடத்த முற்பட்டவேளை அவர் அதில் இருந்து தப்ப முயன்றவேளை அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஏ9 வீதி ரெலிக்கொம் முன்பாக நேற்று மாலை 5.20 மணியளவில் நடைபெற்றுள்ளது. இனந்தெரியாத இரண்டு நபர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது.

அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு நிற வானில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வானுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தெரிவித்தார்.

இத் தாக்குதல் தொடர்பாக தொடர்பாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது கடும் தாக்குதல்  கிளிநொச்சியில் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்கள் ஊடகவியலாளர்  தமிழ்ச்செல்வனை கடத்த முற்பட்டவேளை அவர் அதில் இருந்து தப்ப முயன்றவேளை அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் ஏ9 வீதி ரெலிக்கொம் முன்பாக நேற்று மாலை 5.20 மணியளவில் நடைபெற்றுள்ளது. இனந்தெரியாத இரண்டு நபர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது.அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு நிற வானில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வானுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தெரிவித்தார்.இத் தாக்குதல் தொடர்பாக தொடர்பாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement