• Nov 17 2024

தேர்தல் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

Tamil nila / Nov 14th 2024, 7:25 pm
image

நுவரெலியா பொகவந்தலாவை பிரதேசத்தில் தேர்தல் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பல தமிழ் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் பிராந்திய நிருபராக பணிபுரியும் ஊடகவியலாளர் மீது ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாக ஊடவியலாளர் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் (14) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் குறித்து ஊடகவியலாளர் தெரிவிக்கையில்,

பொகவந்தலாவை கர்கஸ்வோல் தோட்டத்தில் இன்று (14) பிற்பகல் நபர் ஒருவர் தனக்குப் பின்னால் வந்து அருகில் இருந்த கடையொன்றில் இருந்து கத்தியால் தலையில் அடித்ததாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளரின் ஆதரவாளரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நுவரெலியா பொகவந்தலாவை பிரதேசத்தில் தேர்தல் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு பல தமிழ் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் பிராந்திய நிருபராக பணிபுரியும் ஊடகவியலாளர் மீது ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாக ஊடவியலாளர் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் (14) அனுமதிக்கப்பட்டுள்ளார்.இத்தாக்குதல் குறித்து ஊடகவியலாளர் தெரிவிக்கையில்,பொகவந்தலாவை கர்கஸ்வோல் தோட்டத்தில் இன்று (14) பிற்பகல் நபர் ஒருவர் தனக்குப் பின்னால் வந்து அருகில் இருந்த கடையொன்றில் இருந்து கத்தியால் தலையில் அடித்ததாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.இந்த வருட பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளரின் ஆதரவாளரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement