யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு – கிழக்கு மலையக வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் போரினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏற்றுக்கொண்டதாகவும்,
ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை எனவும், தங்கள் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவம் விட்டுச் சென்ற போதிலும் அவர்களுக்கு அந்த காணிகள் உரியதாக இல்லை, அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், அதனை பாதுகாக்கும் நாடு என்பதை உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அநுரவின் ஆட்சியில் நீதி. பிமல் ரத்நாயக்க சூளுரை யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு – கிழக்கு மலையக வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கில் போரினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை எனவும், தங்கள் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.யுத்த காலத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவம் விட்டுச் சென்ற போதிலும் அவர்களுக்கு அந்த காணிகள் உரியதாக இல்லை, அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், அதனை பாதுகாக்கும் நாடு என்பதை உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.