• May 05 2024

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீதி அமைச்சரின் அறிவிப்பு!

Chithra / Jan 10th 2024, 12:19 pm
image

Advertisement

 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்திருக்கிறது. 

2022 ஆம் ஆண்டு மீண்டும் அதனை நாங்கள் செயற்படுத்திய போது அதற்கு 14,998 முறைப்பாடுகள் கிடைத்தன.

அதில் 62 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.

அத்துடன் கடந்த 18 மாத காலப்பகுதியில் அந்த அலுவலகத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமித்து விசாரணை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாேம்.

அதன் பிரகாரம் 5 ,200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை நாங்கள் முடித்திருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீதி அமைச்சரின் அறிவிப்பு  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அதன்படி காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டு மீண்டும் அதனை நாங்கள் செயற்படுத்திய போது அதற்கு 14,998 முறைப்பாடுகள் கிடைத்தன.அதில் 62 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.அத்துடன் கடந்த 18 மாத காலப்பகுதியில் அந்த அலுவலகத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமித்து விசாரணை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாேம்.அதன் பிரகாரம் 5 ,200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை நாங்கள் முடித்திருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement