• Jan 05 2025

ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா! 15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா? வவுனியாவில் உறவுகள் போராட்டம்

Chithra / Dec 30th 2024, 12:55 pm
image

 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத்தா எனத் தெரிவித்து போராட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை  இடம்பெற்றது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?, 

ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா, 15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா என பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் தாங்கியிருந்தனர்.

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  



ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா 15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா வவுனியாவில் உறவுகள் போராட்டம்  காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத்தா எனத் தெரிவித்து போராட்டம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை  இடம்பெற்றது.இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன, ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா, 15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா என பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் தாங்கியிருந்தனர்.இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  

Advertisement

Advertisement

Advertisement