• Nov 23 2024

இலங்கை அரசு அநாவசிய செலவீனங்கள் குறித்து சிந்தித்து நாட்டினை மீட்க சரியான தீர்மானம் எடுக்கவேண்டும்- ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

Tamil nila / Jul 14th 2024, 11:08 pm
image

இலங்கை அரசு அநாவசிய செலவீனங்கள் குறித்து சிந்தித்து நாட்டினை மீட்க சரியான தீர்மானம் எடுக்கவேண்டும் . வடக்கில் இளைஞர் யுவாதிகள் தொழில்வாய்பின்றி  நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலையில் ரணில் அரசு 90லட்சம் ரூபாவினை தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் ஊடாக யாழ் குற்றவெளியில் களியாட்டத்திற்கு செலவழித்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் தெரிவித்தார் 

நேற்று சனிக்கிழமை யாழ் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் யாழில் கச்சேரியினை நடாத்துகின்றது.90 லட்சத்திற்கும் மேல் செலவழித்து இந்த களியாட்டம் அரங்கேற்ற பட்டுள்ளது.

இந்த களியாட்டத்திற்கு 90 இலட்சத்தை செலவு செய்ய முடியும் என்றால் ஏன் வடக்கு இளைஞர்கள் யுவதிகளுக்கு சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது.

பல்கலைக்கழக பட்டங்களை முடித்தும் பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தாய் நாட்டினை விட்டு  தொடர்ச்சியாக வெளியேறுகின்றார்கள்.

அது மாத்திரமில்லாத வைத்தியர்கள் ஆசிரியர்கள் தமது குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு ஏட்ட ஊதியம் நாட்டில் கிடைக்கவில்லை என தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர்.

 போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூகமாக மாறியுள்ளது.வாள்வெட்டுக்க்கள் அதிகரித்துள்ளது .

கொலை கொள்ளை என்பன அதிகரித்து செல்கின்றது.இதிலிருந்து இளைஞர் சமுதாயத்தை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க படவில்லை.

இவையனைத்தும் எமது வரிப்பனத்தில் முன்னெடுக்கபடும் களியாட்டம் .இன்று இலங்கையில் வாழும் மக்களின் பணமே வீன்விரயமாக்கபடுகின்றது.

அண்மையில் கடந்த மாதம் 19ஆம் திகதி 875 கோடி ரூபாய் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது .கடந்த வரவு செலவு திட்டத்தில் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .

அவை போதாது என மேலும் 875 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல இவரது வெளிநாட்டு பயணத்திற்கு 800மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

119 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர்களுடைய சொகுசு வாழ்க்கையின் தேவையினை மாத்திரம் பூர்த்தி செய்கின்றனர்.

இலங்கையில் 25.2விகிதமான மக்கள் 17 ஆயிரத்து 730ரூபாயினை தமது வருமானமாக கொண்டுள்ள நிலையில் பல பண முதலைகள் அரசாங்கத்துக்கு வரி கட்டாமல் அரசியல் செல்வாக்கில் இருக்கின்றனர்.

இலங்கையின் புள்ளிவிபரங்கள் 1இலட்சம் ரூபாய் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவை என குறிப்பிடப்படுகிற நிலையில் இது எமது எழுபத்தினான்கு வருட சாபமாகும் ஆகவே மக்கள் நாம் இந்த அநாவசிய செலவீனங்கள் குறித்து சிந்தித்து நாட்டினை மீட்க சரியான தீர்மானம் எடுக்கவேண்டும்.

ஆகவே நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் ஒன்று இணையும் காலம் கனிந்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை அரசு அநாவசிய செலவீனங்கள் குறித்து சிந்தித்து நாட்டினை மீட்க சரியான தீர்மானம் எடுக்கவேண்டும்- ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு இலங்கை அரசு அநாவசிய செலவீனங்கள் குறித்து சிந்தித்து நாட்டினை மீட்க சரியான தீர்மானம் எடுக்கவேண்டும் . வடக்கில் இளைஞர் யுவாதிகள் தொழில்வாய்பின்றி  நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலையில் ரணில் அரசு 90லட்சம் ரூபாவினை தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் ஊடாக யாழ் குற்றவெளியில் களியாட்டத்திற்கு செலவழித்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் தெரிவித்தார் நேற்று சனிக்கிழமை யாழ் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் யாழில் கச்சேரியினை நடாத்துகின்றது.90 லட்சத்திற்கும் மேல் செலவழித்து இந்த களியாட்டம் அரங்கேற்ற பட்டுள்ளது.இந்த களியாட்டத்திற்கு 90 இலட்சத்தை செலவு செய்ய முடியும் என்றால் ஏன் வடக்கு இளைஞர்கள் யுவதிகளுக்கு சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது.பல்கலைக்கழக பட்டங்களை முடித்தும் பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தாய் நாட்டினை விட்டு  தொடர்ச்சியாக வெளியேறுகின்றார்கள்.அது மாத்திரமில்லாத வைத்தியர்கள் ஆசிரியர்கள் தமது குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு ஏட்ட ஊதியம் நாட்டில் கிடைக்கவில்லை என தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர். போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூகமாக மாறியுள்ளது.வாள்வெட்டுக்க்கள் அதிகரித்துள்ளது .கொலை கொள்ளை என்பன அதிகரித்து செல்கின்றது.இதிலிருந்து இளைஞர் சமுதாயத்தை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க படவில்லை.இவையனைத்தும் எமது வரிப்பனத்தில் முன்னெடுக்கபடும் களியாட்டம் .இன்று இலங்கையில் வாழும் மக்களின் பணமே வீன்விரயமாக்கபடுகின்றது.அண்மையில் கடந்த மாதம் 19ஆம் திகதி 875 கோடி ரூபாய் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது .கடந்த வரவு செலவு திட்டத்தில் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .அவை போதாது என மேலும் 875 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல இவரது வெளிநாட்டு பயணத்திற்கு 800மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.119 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர்களுடைய சொகுசு வாழ்க்கையின் தேவையினை மாத்திரம் பூர்த்தி செய்கின்றனர்.இலங்கையில் 25.2விகிதமான மக்கள் 17 ஆயிரத்து 730ரூபாயினை தமது வருமானமாக கொண்டுள்ள நிலையில் பல பண முதலைகள் அரசாங்கத்துக்கு வரி கட்டாமல் அரசியல் செல்வாக்கில் இருக்கின்றனர்.இலங்கையின் புள்ளிவிபரங்கள் 1இலட்சம் ரூபாய் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவை என குறிப்பிடப்படுகிற நிலையில் இது எமது எழுபத்தினான்கு வருட சாபமாகும் ஆகவே மக்கள் நாம் இந்த அநாவசிய செலவீனங்கள் குறித்து சிந்தித்து நாட்டினை மீட்க சரியான தீர்மானம் எடுக்கவேண்டும்.ஆகவே நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் ஒன்று இணையும் காலம் கனிந்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement