• Nov 22 2024

பெரு வெற்றியுடன் சஜித் ஜனாதிபதியாவது உறுதி - அடித்துக் கூறுகின்றார் இராதாகிருஷ்ணன்

Chithra / Jul 15th 2024, 7:29 am
image


"ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி. அந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ பெரும் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாவார்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் நேற்று (14) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர். ராஜாராம், மலையகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகீர் பாலச்சந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.


இதன்போது இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்குரிய அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிட்டுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. இந்நிலையில், தேர்தலைப் பிற்போடுவதற்குச் சிலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா எனக் கோரி ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. 

19 ஆவது திருத்தச் சட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி மற்றுமொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டலுடன்தான் 19 நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்த விடயத்தில் சிக்கல் வராது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதி. ஜனாதிபதித் தேர்தலுக்கென வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நிதி இல்லை எனக் காரணம் கூறவும் முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் ஆக்கி தனி ஒருவராக நாடாளுமன்றம் வந்து, ஜனாதிபதியாகத் தெரிவானமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திறமை. ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என அவர் குழம்பியுள்ளார். ஏனெனில் மக்கள் ஆணை அவருக்கு இல்லை.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ பதவி வகிக்கின்றார். அவருக்கான வெற்றி வாய்ப்பே அதிகம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் சஜித் பக்கம் இருந்து சிலர் ஜனாதிபதியுடன் இணையவுள்ளனர் எனக் கூறப்படுவதெல்லாம் சாத்தியமற்ற விடயமாகும்." - என்றார். 

பெரு வெற்றியுடன் சஜித் ஜனாதிபதியாவது உறுதி - அடித்துக் கூறுகின்றார் இராதாகிருஷ்ணன் "ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி. அந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ பெரும் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாவார்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் நேற்று (14) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர். ராஜாராம், மலையகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகீர் பாலச்சந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்குரிய அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிட்டுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. இந்நிலையில், தேர்தலைப் பிற்போடுவதற்குச் சிலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா எனக் கோரி ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. 19 ஆவது திருத்தச் சட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி மற்றுமொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டலுடன்தான் 19 நிறைவேற்றப்பட்டது. எனவே, இந்த விடயத்தில் சிக்கல் வராது.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதி. ஜனாதிபதித் தேர்தலுக்கென வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நிதி இல்லை எனக் காரணம் கூறவும் முடியாது.ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் ஆக்கி தனி ஒருவராக நாடாளுமன்றம் வந்து, ஜனாதிபதியாகத் தெரிவானமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திறமை. ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என அவர் குழம்பியுள்ளார். ஏனெனில் மக்கள் ஆணை அவருக்கு இல்லை.அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சியை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ பதவி வகிக்கின்றார். அவருக்கான வெற்றி வாய்ப்பே அதிகம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் சஜித் பக்கம் இருந்து சிலர் ஜனாதிபதியுடன் இணையவுள்ளனர் எனக் கூறப்படுவதெல்லாம் சாத்தியமற்ற விடயமாகும்." - என்றார். 

Advertisement

Advertisement

Advertisement