• Sep 21 2024

கல்முனை பிரதேச செயலகம் உப பிரதேச செயலகம் அல்ல - தரக்குறைப்பு செய்தால் சட்டநடவடிக்கை - தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் எச்சரிக்கை...!samugammedia

Anaath / Dec 13th 2023, 4:12 pm
image

Advertisement

கல்முனை பிரதேச செயலகத்தினை இனிவரும் காலங்களில் எவரும்  உப பிரதேச செயலகம் என அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்ட்டத்தில் உள்ள  கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்தது.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பல சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இந்த பிரதேச செயலகத்தை தற்போது உப பிரதேச செயலகமாக வகுக்கும் திட்டத்தில் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக மக்கள் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் தத்தமது கருத்துக்களில் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் இச்செயலகமானது உப பிரதேச செயலகம் அல்ல என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.இந்த விடயத்தை எமது கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

அத்துடன் இனிவரும் காலங்களில் உப என்று அழைத்து பிரதேச செயலகத்தை தரம் குறைக்க முற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் குறித்த பிரதேச செயலகத்திற்கு ஒரு வர்த்தமானி ஒன்று இன்மையினால் ஊடகங்களும் உப பிரதேச செயலகம் என்று பிரசுரிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

இதன் போது கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் செயலாளர் மற்றும் உப செயலாளர் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கல்முனை பிரதேச செயலகம் உப பிரதேச செயலகம் அல்ல - தரக்குறைப்பு செய்தால் சட்டநடவடிக்கை - தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் எச்சரிக்கை.samugammedia கல்முனை பிரதேச செயலகத்தினை இனிவரும் காலங்களில் எவரும்  உப பிரதேச செயலகம் என அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அம்பாறை மாவட்ட்டத்தில் உள்ள  கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்தது.மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பல சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இந்த பிரதேச செயலகத்தை தற்போது உப பிரதேச செயலகமாக வகுக்கும் திட்டத்தில் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக மக்கள் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் தத்தமது கருத்துக்களில் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் இச்செயலகமானது உப பிரதேச செயலகம் அல்ல என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.இந்த விடயத்தை எமது கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.அத்துடன் இனிவரும் காலங்களில் உப என்று அழைத்து பிரதேச செயலகத்தை தரம் குறைக்க முற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் குறித்த பிரதேச செயலகத்திற்கு ஒரு வர்த்தமானி ஒன்று இன்மையினால் ஊடகங்களும் உப பிரதேச செயலகம் என்று பிரசுரிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.இதன் போது கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் செயலாளர் மற்றும் உப செயலாளர் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement