• Nov 28 2024

காசாவுக்காக மூன்று லட்சம் உதவுத் தொகையை கையளித்தது கல்முனை கல்வி வலயம்..!samugammedia

mathuri / Mar 26th 2024, 5:16 am
image

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைக்காக 3 இலட்சம்  ரூபா கையளிக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முதற்கட்ட காசோலையினை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிரும் பங்கேற்றிருந்தார். வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் நேற்று (25) நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந் நிகழ்வு இடம்பெற்றது.


வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார், கல்விசார ஊழியர்கள் மற்றும் அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


வருடந்தோறும் இடம்பெறும் இப்தார் நிகழ்விற்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இத் தொகை  திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காசாவுக்காக மூன்று லட்சம் உதவுத் தொகையை கையளித்தது கல்முனை கல்வி வலயம்.samugammedia கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைக்காக 3 இலட்சம்  ரூபா கையளிக்கப்பட்டுள்ளது.வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முதற்கட்ட காசோலையினை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிரும் பங்கேற்றிருந்தார். வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் நேற்று (25) நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந் நிகழ்வு இடம்பெற்றது.வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார், கல்விசார ஊழியர்கள் மற்றும் அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.வருடந்தோறும் இடம்பெறும் இப்தார் நிகழ்விற்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இத் தொகை  திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement