• Apr 24 2026

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதில் கல்முனை மாநகர சபை மந்தநிலை - மக்கள் விசனம்

Chithra / Apr 24th 2026, 12:36 pm
image

கட்டாக்காலி கால்நடைகளை கல்முனை பொதுச் சந்தையில் இருந்து  கட்டுப்படுத்த கல்முனை மாநகர   சபை நடவடிக்கை எடுப்பதில் மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்  கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்குதலில் தினமும் ஈடுபடுகின்றன.


இதற்கமைய  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில்  கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என   அறிவித்தல் ஒன்றினை ஏலவே  விடுத்திருந்தும் பயனற்றதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.


ஆனால் அண்மையில் மாநகர சபையினால் கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டு மாநகர - பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.


இதன்போது கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பல தடவைகள்  அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால் அம்மாட்டு உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் சென்றிருந்தனர்.


இருந்த போதிலும் தற்போது அதிகளவான கட்டாக்காலி மாடுகள் தினமும் இச்சந்தைக்கு வருகை தந்து பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரிங்களை மேற்கொண்டு வருகின்றன.


எனவே கல்முனை மாநகர பொதுச்சந்தையில்  சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதில் கல்முனை மாநகர சபை மந்தநிலை - மக்கள் விசனம் கட்டாக்காலி கால்நடைகளை கல்முனை பொதுச் சந்தையில் இருந்து  கட்டுப்படுத்த கல்முனை மாநகர   சபை நடவடிக்கை எடுப்பதில் மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்  கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்குதலில் தினமும் ஈடுபடுகின்றன.இதற்கமைய  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில்  கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என   அறிவித்தல் ஒன்றினை ஏலவே  விடுத்திருந்தும் பயனற்றதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.ஆனால் அண்மையில் மாநகர சபையினால் கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டு மாநகர - பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.இதன்போது கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பல தடவைகள்  அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால் அம்மாட்டு உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் சென்றிருந்தனர்.இருந்த போதிலும் தற்போது அதிகளவான கட்டாக்காலி மாடுகள் தினமும் இச்சந்தைக்கு வருகை தந்து பொதுமக்களுக்கு பல்வேறு அசௌகரிங்களை மேற்கொண்டு வருகின்றன.எனவே கல்முனை மாநகர பொதுச்சந்தையில்  சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement