• Sep 02 2026

டுபாயில் கைது செய்யப்பட்ட “களு மல்லி” – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

Chithra / Sep 1st 2026, 3:59 pm
image


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஷெஹான் சத்சர என்ற “தெஹிபாலே மல்லி”யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற “களு மல்லி” டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


25 வயதுடைய துஷான் சத்சரவுக்கு எதிராக தென் மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை பொலிஸார் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் டுபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாயில் கைது செய்யப்பட்ட “களு மல்லி” – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஷெஹான் சத்சர என்ற “தெஹிபாலே மல்லி”யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற “களு மல்லி” டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.25 வயதுடைய துஷான் சத்சரவுக்கு எதிராக தென் மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை பொலிஸார் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் டுபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement