பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு தனிப்பட்ட அறிவித்தல் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த அறிலித்தல், 2024, ஆகஸ்ட் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என்ற அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதே இந்த அறிவிப்பு அனுப்பப்படுகிறது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, ஷானி அபேசேகர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், மனுதாரர் ஷானி அபேசேகர சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, நிலைமையின் தீவிரத்தன்மையை வலியுறுத்தி, தற்போதுள்ள அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அபேசேகரவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
கமல் குணரத்ன, தேசபந்து தென்னகோன் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு தனிப்பட்ட அறிவித்தல் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த அறிலித்தல், 2024, ஆகஸ்ட் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என்ற அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதே இந்த அறிவிப்பு அனுப்பப்படுகிறது.தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, ஷானி அபேசேகர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இந்தநிலையில், மனுதாரர் ஷானி அபேசேகர சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, நிலைமையின் தீவிரத்தன்மையை வலியுறுத்தி, தற்போதுள்ள அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அபேசேகரவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.