• Sep 08 2024

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கருத்துக் கணிப்பில் ட்ரம்ப்பை முந்துகிறார் கமலா ஹரிஸ்

Tharun / Jul 24th 2024, 7:23 pm
image

Advertisement

அமெரிக்க ஜனாதிபதித்  தேர்தல் போட்டியிலிருந்து அதிபர் ஜோ பிடன் விலகி விட்ட நிலையில் புதிதாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை விட, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள கமலா ஹரிஸுக்கு ஆதரவு அதிகம் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு 42 சதவீத ஆதரவும், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீத ஆதரவும் காணப்படுகிறது. இது சிறிய அளவிலான அதிகரிப்பு  என்றாலும் கூட வரும் நாட்களில் கமலா ஹரிஸ் அதிரடியாக செயல்படும்போது இந்த ஆதரவு வித்தியாசம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ராய்ட்டர்ஸ் - இப்ஸாஸ் இணைந்து எடுத்துள்ளன. பிடன் தனது முடிவை அறிவித்த 2 நாட்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு இது.

முந்தைய கருத்துக் கணிப்பில் கமலா ஹரிஸும், ட்ரம்ப்பும் சம அளவில் தலா 44 சதவீத ஆதரவுடன் இருந்தனர். தற்போது ட்ரம்ப்பை முதல் முறையாக முந்தியுள்ளார் கமலா ஹரிஸ் என்பது ஜனநாயகக் கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் கமலா ஹரிஸ் அதிகாரப்பூர்வ ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். தற்போது அவர் மிகப் பெரிய அளவில் வேட்பாளர் விவாதத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த வேட்பாளர் விவாதத்தின்போதுதான் ஜோ பிடன் செல்வாக்கு வெகுவாக சரிந்தது. அதே இடத்தில் அதிரடி காட்டி டிரம்ப்பை காலி செய்ய திட்டமிட்டுள்ளார் கமலா ஹரிஸ். அவரது பேச்சுத் திறன் அனைவருக்கும் தெரிந்ததுதான். மேலும் அழுத்தம் திருத்தமாகவும் பேசக் கூடியவர். இதனால் வரும் நாட்களில் விவாதங்களில் கமலா ஹரிஸின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று ஜனநாயகக் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.



அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கருத்துக் கணிப்பில் ட்ரம்ப்பை முந்துகிறார் கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதித்  தேர்தல் போட்டியிலிருந்து அதிபர் ஜோ பிடன் விலகி விட்ட நிலையில் புதிதாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை விட, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள கமலா ஹரிஸுக்கு ஆதரவு அதிகம் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.டொனால்ட் ட்ரம்ப்புக்கு 42 சதவீத ஆதரவும், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீத ஆதரவும் காணப்படுகிறது. இது சிறிய அளவிலான அதிகரிப்பு  என்றாலும் கூட வரும் நாட்களில் கமலா ஹரிஸ் அதிரடியாக செயல்படும்போது இந்த ஆதரவு வித்தியாசம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ராய்ட்டர்ஸ் - இப்ஸாஸ் இணைந்து எடுத்துள்ளன. பிடன் தனது முடிவை அறிவித்த 2 நாட்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு இது.முந்தைய கருத்துக் கணிப்பில் கமலா ஹரிஸும், ட்ரம்ப்பும் சம அளவில் தலா 44 சதவீத ஆதரவுடன் இருந்தனர். தற்போது ட்ரம்ப்பை முதல் முறையாக முந்தியுள்ளார் கமலா ஹரிஸ் என்பது ஜனநாயகக் கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் கமலா ஹரிஸ் அதிகாரப்பூர்வ ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். தற்போது அவர் மிகப் பெரிய அளவில் வேட்பாளர் விவாதத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த வேட்பாளர் விவாதத்தின்போதுதான் ஜோ பிடன் செல்வாக்கு வெகுவாக சரிந்தது. அதே இடத்தில் அதிரடி காட்டி டிரம்ப்பை காலி செய்ய திட்டமிட்டுள்ளார் கமலா ஹரிஸ். அவரது பேச்சுத் திறன் அனைவருக்கும் தெரிந்ததுதான். மேலும் அழுத்தம் திருத்தமாகவும் பேசக் கூடியவர். இதனால் வரும் நாட்களில் விவாதங்களில் கமலா ஹரிஸின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று ஜனநாயகக் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement