• Mar 09 2026

கண்டி நகர அபிவிருத்தி திட்டம்: நடைபாதை வியாபாரிகள் வெளியேற்றம்

Chithra / Dec 29th 2025, 11:56 am
image


கண்டி நகரை ஒழுங்கான  ஒரு நகரமாக மாற்றும் திட்டத்தின் முதற் கட்டமாகவே  நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


இந்நிலையில் எடுத்த முடிவில்  மாற்றம்  இல்லை  என்று கண்டி மேயர் சந்திரசிரி விஜயநாயக்க தெரிவித்தார்.


மாநகர சபை அதிகாரம், ஆளுநர், ஜனாதிபதி, பாராளுமன்றம், அமைச்சர்கள் என அனைத்தும் எமது பக்கம் இருக்கும் போது நாம் நிலை தடுமாறத் தேவையில்லை, எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. 


எனவே டிசம்பர் 31ம் திகதி முதல் கண்டியிலுள்ள நடை பாதை வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளளோம்  என்றும் குறிப்பிட்டார். 


நடை பாதை வர்த்தகம் காரணமாக சுற்றுலா பயணிகள் உட்பட பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதுடன் நகரின் வனப்பும் குறைந்து வருகிறது என்றார். 


கண்டி நகர அபிவிருத்தி திட்டம்: நடைபாதை வியாபாரிகள் வெளியேற்றம் கண்டி நகரை ஒழுங்கான  ஒரு நகரமாக மாற்றும் திட்டத்தின் முதற் கட்டமாகவே  நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில் எடுத்த முடிவில்  மாற்றம்  இல்லை  என்று கண்டி மேயர் சந்திரசிரி விஜயநாயக்க தெரிவித்தார்.மாநகர சபை அதிகாரம், ஆளுநர், ஜனாதிபதி, பாராளுமன்றம், அமைச்சர்கள் என அனைத்தும் எமது பக்கம் இருக்கும் போது நாம் நிலை தடுமாறத் தேவையில்லை, எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. எனவே டிசம்பர் 31ம் திகதி முதல் கண்டியிலுள்ள நடை பாதை வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளளோம்  என்றும் குறிப்பிட்டார். நடை பாதை வர்த்தகம் காரணமாக சுற்றுலா பயணிகள் உட்பட பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதுடன் நகரின் வனப்பும் குறைந்து வருகிறது என்றார். 

Advertisement

Advertisement

Advertisement