• Jan 11 2025

காரைநகர் படகு தள திட்டம்: இந்தியா இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Chithra / Jan 3rd 2025, 9:29 am
image

 

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் தளத்தை புனரமைப்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 290 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 டிசம்பர் 16ஆம் திகதியன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் அப்போதைய இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் க்சேணுகா திரேனி செனிவிரத்ன ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இதன்படி, இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், காரைநகர் படகுத் தளத்தை புனரமைக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம், தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள், பொருட்கள், சேவைகள் போன்றவற்றை நிறுவுதல் உள்ளிட்ட குடிமைப் பணிகள் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், புனரமைக்கப்பட்ட படகுத் தளம், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படகுத் தளத்தைச் சுற்றியுள்ள சிறிய நிறுவனங்கள் உட்பட அந்தப்பகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், அத்துடன் தரமான மீன்வளப் பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்த உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காரைநகர் படகு தள திட்டம்: இந்தியா இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் தளத்தை புனரமைப்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.இந்திய அரசாங்கத்தின் 290 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 டிசம்பர் 16ஆம் திகதியன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் அப்போதைய இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் க்சேணுகா திரேனி செனிவிரத்ன ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.இதன்படி, இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், காரைநகர் படகுத் தளத்தை புனரமைக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இந்தத் திட்டம், தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள், பொருட்கள், சேவைகள் போன்றவற்றை நிறுவுதல் உள்ளிட்ட குடிமைப் பணிகள் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், புனரமைக்கப்பட்ட படகுத் தளம், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், படகுத் தளத்தைச் சுற்றியுள்ள சிறிய நிறுவனங்கள் உட்பட அந்தப்பகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், அத்துடன் தரமான மீன்வளப் பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்த உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement