அம்பாறை மாவட்டம், காரைதீவைச் சேர்ந்த பிரபல பாடல் ஆசிரியர் இரா.இராஜமோகனின் 38 ஆவது இசைத்தட்டு வெளியீடு காரைதீவில் நேற்று நடைபெற்றது .
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் பவள விழா நடைபவனியை மையமாக வைத்து "காரைதீவு புகழ் பாடல்" எனும் மகுடத்தின் கீழ் ஆக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாக இந்த இசைத்தட்டு அமையப் பெற்றிருக்கிறது.
முதலாவது இசைத்தட்டை காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணனிடம் பாடலாசிரியர் இராஜமோகன் வழங்கி வெளியிட்டு வைத்தார்.
அந்தச் சமயம் கலாசார உத்தியோகத்தர்களான சுதர்சன் சுரேஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்தனர்.
குறித்த பாடல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பாடியுமிருக்கும்
கலைஞர் ராஜமோகன் கொழும்புத் துறைமுகத்தில் பணியாற்றுபவர்.
அவர் கடந்த பல வருடங்களாக ஆன்மீகம் தொடர்பான பாடல்களை எழுதிப் பாடி 37 இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவு கலைஞர் மோகனின் 38 ஆவது இசைத்தட்டு வெளியீடு. அம்பாறை மாவட்டம், காரைதீவைச் சேர்ந்த பிரபல பாடல் ஆசிரியர் இரா.இராஜமோகனின் 38 ஆவது இசைத்தட்டு வெளியீடு காரைதீவில் நேற்று நடைபெற்றது .காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் பவள விழா நடைபவனியை மையமாக வைத்து "காரைதீவு புகழ் பாடல்" எனும் மகுடத்தின் கீழ் ஆக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாக இந்த இசைத்தட்டு அமையப் பெற்றிருக்கிறது.முதலாவது இசைத்தட்டை காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணனிடம் பாடலாசிரியர் இராஜமோகன் வழங்கி வெளியிட்டு வைத்தார். அந்தச் சமயம் கலாசார உத்தியோகத்தர்களான சுதர்சன் சுரேஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்தனர்.குறித்த பாடல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பாடியுமிருக்கும்கலைஞர் ராஜமோகன் கொழும்புத் துறைமுகத்தில் பணியாற்றுபவர்.அவர் கடந்த பல வருடங்களாக ஆன்மீகம் தொடர்பான பாடல்களை எழுதிப் பாடி 37 இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.