• Dec 15 2024

அம்பாறையில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம்

Tharmini / Dec 15th 2024, 9:54 am
image

கார்த்திகை தீபத் திருவிழாவை  இந்துக்கள் நாடளாவிய ரீதியில்  கோலாகலமாக கொண்டாடினர்.

நேற்று (14) இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க முடிந்தது.

சிறுவர் சிறுமியர் தத்தமது வீடுகளுக்கு முன்னால்  தீபம் ஏற்றி ஆனந்தமடைந்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில்  காரைதீவு, சம்மாந்துறை,பெரியநீலாவணை ,கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு ,வீரமுனை ,நாவிதன்வெளி ,அன்னமலை ,மத்தியமுகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ,கோளாவில்  ,ஆலையடிவேம்பு ,பகுதிகளில் உள்ள  முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம்   நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில்   சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக  இடம்பெற்றன.







அம்பாறையில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் கார்த்திகை தீபத் திருவிழாவை  இந்துக்கள் நாடளாவிய ரீதியில்  கோலாகலமாக கொண்டாடினர்.நேற்று (14) இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க முடிந்தது.சிறுவர் சிறுமியர் தத்தமது வீடுகளுக்கு முன்னால்  தீபம் ஏற்றி ஆனந்தமடைந்தனர்.மேலும் அம்பாறை மாவட்டத்தில்  காரைதீவு, சம்மாந்துறை,பெரியநீலாவணை ,கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு ,வீரமுனை ,நாவிதன்வெளி ,அன்னமலை ,மத்தியமுகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ,கோளாவில்  ,ஆலையடிவேம்பு ,பகுதிகளில் உள்ள  முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம்   நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில்   சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக  இடம்பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement