• Jul 08 2025

கதிர்காம கந்தனின் 11 ஆம் நாள் வீதி உலா - கண்களைக் கவர்ந்த கலாசார நிகழ்வுகள்!

shanuja / Jul 7th 2025, 12:19 pm
image

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலய திருவிழாவின் 11 ஆவது நாள் வீதி உலா நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இடம்பெற்றது. 


கதிர்காமம் கந்தன் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் இந்த வருட கதிர்காமம் கந்தன் ஆலய  திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 


தொடர்ச்சியாக 15 நாள்கள் இடம்பெறும் திருவிழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், ஊர்வலங்கள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் கதிர்காம கந்தனைக் காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன வேறுபாடுகளின்றி பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். 


கதிர்காமம் கந்தன் ஆலய  திருவிழா, இலங்கையில் ஆடிவேல் உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தளவில் மிகவும் பிரபலமான ஓர் ஆலயமாக கதிர்காம கந்தன் ஆலயம் பார்க்கப்படுகின்றது. 


இந்தவருடம் கடந்த ஜூன் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரவாரமாகி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒவ்வொரு நாள் திருவழாவிலும் பல்லேறு நிகழ்வுகள் கலாசார ரீதியாக இடம்பெறுகின்றது. குறிப்பாக கதிர்காம கந்தனில் எசலப்பெரஹரா ஊர்வலம் மிகவும் சிறப்பானதொன்றாகக் காணப்படுகின்றது. 


அந்த வரிசையில் நேற்று இடம்பெற்ற 11ஆவது நாள் ஊர்வலத்தில் பக்தர்கள் புடைசூழ வீதி உலா இடம்பெற்றது. அதில் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் பல கலாசார நிகழ்வுகளுடன் வீதி உலா உற்சவம் இடம்பெற்றது. 


கதிர்காம கந்தனின் பெருந்திருவிழா ஜூலை 10 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையு என்பது குறிப்பிடத்தக்கது.

கதிர்காம கந்தனின் 11 ஆம் நாள் வீதி உலா - கண்களைக் கவர்ந்த கலாசார நிகழ்வுகள் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலய திருவிழாவின் 11 ஆவது நாள் வீதி உலா நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இடம்பெற்றது. கதிர்காமம் கந்தன் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் இந்த வருட கதிர்காமம் கந்தன் ஆலய  திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக 15 நாள்கள் இடம்பெறும் திருவிழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், ஊர்வலங்கள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் கதிர்காம கந்தனைக் காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன வேறுபாடுகளின்றி பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். கதிர்காமம் கந்தன் ஆலய  திருவிழா, இலங்கையில் ஆடிவேல் உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தளவில் மிகவும் பிரபலமான ஓர் ஆலயமாக கதிர்காம கந்தன் ஆலயம் பார்க்கப்படுகின்றது. இந்தவருடம் கடந்த ஜூன் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரவாரமாகி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒவ்வொரு நாள் திருவழாவிலும் பல்லேறு நிகழ்வுகள் கலாசார ரீதியாக இடம்பெறுகின்றது. குறிப்பாக கதிர்காம கந்தனில் எசலப்பெரஹரா ஊர்வலம் மிகவும் சிறப்பானதொன்றாகக் காணப்படுகின்றது. அந்த வரிசையில் நேற்று இடம்பெற்ற 11ஆவது நாள் ஊர்வலத்தில் பக்தர்கள் புடைசூழ வீதி உலா இடம்பெற்றது. அதில் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் பல கலாசார நிகழ்வுகளுடன் வீதி உலா உற்சவம் இடம்பெற்றது. கதிர்காம கந்தனின் பெருந்திருவிழா ஜூலை 10 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement