• May 02 2026

வெளிநாட்டு கடத்தல் கும்பலின் முக்கிய உதவியாளர் சிக்கினார்!

Chithra / Mar 15th 2026, 12:33 pm
image


வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய உதவியாளர் ஒருவர், சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பலப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


அஹுங்கல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேகநபரின் இல்லம் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டது.


இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 261 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபா ரொக்கப் பணமும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் நபர் ஒருவரின் பிரதான உதவியாளர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வெளிநாட்டு கடத்தல் கும்பலின் முக்கிய உதவியாளர் சிக்கினார் வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய உதவியாளர் ஒருவர், சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பலப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அஹுங்கல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேகநபரின் இல்லம் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டது.இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 261 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபா ரொக்கப் பணமும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் நபர் ஒருவரின் பிரதான உதவியாளர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement