• Nov 14 2024

சிறுவனை கொலை செய்யப் போவதாக மிரட்டி குடும்பத்தை கட்டி வைத்து கொள்ளை! முல்லைத்தீவில் பரபரப்பு

Chithra / May 28th 2024, 9:28 am
image

முல்லைத்தீவு மாவட்டம், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்தவர்கள் கத்தி முனையில் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நட்டாங்கண்டல் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட குழு வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்துவிட்டு மிரட்டியுள்ளனர்.

வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்களில் ஒருவர், வாசல் கதவைத் திறந்த பின்னர் மற்றையவர்கள் உள்நுழைந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் 14 வயது மகனைக் கொலை செய்யப் போவதாக மிரட்டிய கொள்ளையர்கள், அந்தச் சிறுவனின் தாய், தந்தையின் கண்களை மூடிக் கட்டி விட்டு மகனை நகைகளை எடுத்துத் தருமாறு மிரட்டியுள்ளனர்.

கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸ் என அடையாளப்படுத்தப்பட்ட ரீ சேட் அணிந்து வந்திருந்தார் என்றும், வீட்டின் உரிமையாளரை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தே உள்நுழைந்தார் என்றும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களால் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், ஒரு மோட்டார் சைக்கிள் எரிபொருள் தீர்ந்த நிலையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவனை கொலை செய்யப் போவதாக மிரட்டி குடும்பத்தை கட்டி வைத்து கொள்ளை முல்லைத்தீவில் பரபரப்பு முல்லைத்தீவு மாவட்டம், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்தவர்கள் கத்தி முனையில் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.நட்டாங்கண்டல் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட குழு வீட்டில் இருந்தவர்களைக் கட்டி வைத்துவிட்டு மிரட்டியுள்ளனர்.வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்களில் ஒருவர், வாசல் கதவைத் திறந்த பின்னர் மற்றையவர்கள் உள்நுழைந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.வீட்டு உரிமையாளரின் 14 வயது மகனைக் கொலை செய்யப் போவதாக மிரட்டிய கொள்ளையர்கள், அந்தச் சிறுவனின் தாய், தந்தையின் கண்களை மூடிக் கட்டி விட்டு மகனை நகைகளை எடுத்துத் தருமாறு மிரட்டியுள்ளனர்.கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸ் என அடையாளப்படுத்தப்பட்ட ரீ சேட் அணிந்து வந்திருந்தார் என்றும், வீட்டின் உரிமையாளரை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தே உள்நுழைந்தார் என்றும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொள்ளையர்களால் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், ஒரு மோட்டார் சைக்கிள் எரிபொருள் தீர்ந்த நிலையில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement