• Apr 16 2025

தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மாற்றுத் திறனாளிகள் சாதனை..!

Sharmi / Apr 10th 2025, 2:50 pm
image

தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.  

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2025ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி ஹோமாகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

25 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாற்றுவலுவுள்ளோர் கலந்து கொண்ட குறித்த போட்டியில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் 50 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்ட அதேவேளை 6 தங்கப் பதக்கதையும் 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

43 புள்ளிகளைப் பெற்று கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தினையும் 36 புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. 

இந்நிலையில் தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகள் இன்றையதினம் கௌரவிக்கப்பபட்டதுடன், கெளரவிப்பு நிகழ்வில் பதில் மாவட்ட செயலாளர் எஸ்-முரளீதரன், மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,மாற்றுவலுவுள்ளோர் என பலரும் கலந்து கொண்டனர்.







தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மாற்றுத் திறனாளிகள் சாதனை. தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,2025ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி ஹோமாகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 25 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாற்றுவலுவுள்ளோர் கலந்து கொண்ட குறித்த போட்டியில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் 50 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்ட அதேவேளை 6 தங்கப் பதக்கதையும் 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.43 புள்ளிகளைப் பெற்று கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தினையும் 36 புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகள் இன்றையதினம் கௌரவிக்கப்பபட்டதுடன், கெளரவிப்பு நிகழ்வில் பதில் மாவட்ட செயலாளர் எஸ்-முரளீதரன், மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,மாற்றுவலுவுள்ளோர் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now