• Nov 07 2025

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள்; விரைவில் வழங்க நடவடிக்கை- இளங்குமரன் எம் பி!

shanuja / Oct 5th 2025, 4:12 pm
image

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 


வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக மூன்று மாத காலப்பகுதியில் 11 வீடுகள் இன்று உத்தியோபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது


கிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 11 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (05)நடைபெற்றது. 


இந்நிகழ்வில்  கலந்துகொண்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


 15 வருட காலமாக நிரந்தர வீடு இன்றி தவித்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக 3 மாத கால பகுதிக்குள் விரைவாக புதிய ஓர் அழகான வீடுடை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. 


 கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனையும் விரைவாக  மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. 


அத்துடன் வடக்கில் உள்ள நூறு பாடசாலைகள் அடுத்த வருட காலப்பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பயனடைய கூடும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தாக மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள்; விரைவில் வழங்க நடவடிக்கை- இளங்குமரன் எம் பி கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக மூன்று மாத காலப்பகுதியில் 11 வீடுகள் இன்று உத்தியோபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதுகிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 11 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (05)நடைபெற்றது. இந்நிகழ்வில்  கலந்துகொண்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  15 வருட காலமாக நிரந்தர வீடு இன்றி தவித்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக 3 மாத கால பகுதிக்குள் விரைவாக புதிய ஓர் அழகான வீடுடை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலதிகமாக 51 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனையும் விரைவாக  மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன் வடக்கில் உள்ள நூறு பாடசாலைகள் அடுத்த வருட காலப்பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பயனடைய கூடும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தாக மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement