• Nov 22 2024

நோய் தாக்கங்கள் காரணமாக கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு...!samugammedia

Sharmi / Dec 5th 2023, 1:47 pm
image

பல்வேறு வகையான நோய் தாக்கங்கள் காரணமாக கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக பயிர்ச்செய்கை கல்மடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விவசாயிகள் மடிச்சு கட்டி மற்றும் கபில நிற தத்தி நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சடுதியாக குறித்த தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நோய்த் தாக்கத்திற்கு பல தடவைகள் கிருமி நாசினிகள் விசிறப்பட்டிருந்த போதிலும் எந்தவித பயனும் அற்ற நிலையில் பயிர்கள் வளர்ச்சி இன்றி அதே நிலையிலேயே காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கிருமிநாசினிகள் கொள்வனவு செய்து விசிறியும் உரிய பயனை பெற முடியாத நிலையில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.



நோய் தாக்கங்கள் காரணமாக கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்பு.samugammedia பல்வேறு வகையான நோய் தாக்கங்கள் காரணமாக கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக பயிர்ச்செய்கை கல்மடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த விவசாயிகள் மடிச்சு கட்டி மற்றும் கபில நிற தத்தி நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பிரதேசத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சடுதியாக குறித்த தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.நோய்த் தாக்கத்திற்கு பல தடவைகள் கிருமி நாசினிகள் விசிறப்பட்டிருந்த போதிலும் எந்தவித பயனும் அற்ற நிலையில் பயிர்கள் வளர்ச்சி இன்றி அதே நிலையிலேயே காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கிருமிநாசினிகள் கொள்வனவு செய்து விசிறியும் உரிய பயனை பெற முடியாத நிலையில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement