• Mar 31 2025

கிளிநொச்சி கண்ணகைபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

Sharmi / Aug 20th 2024, 6:34 pm
image

மாகாண நீர்ப்பாசன திணைகளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகைபுரம் வீதிப் புனரமைப்பு பணிகள் இன்று(20) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 40 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியின் 2.5KM தார் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

இதன்போது ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து குறித்த வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வீதிப் புனரமைப்பு வேலைகளினை  கிளிநொச்சி மாவட்ட பிரதி  நீர்ப்பாசன  பணிப்பாளர் K.கருணாநிதி,  கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன பொறியியலாளர் T.ரிஷியந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



கிளிநொச்சி கண்ணகைபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம். மாகாண நீர்ப்பாசன திணைகளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகைபுரம் வீதிப் புனரமைப்பு பணிகள் இன்று(20) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 40 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியின் 2.5KM தார் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.இதன்போது ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து குறித்த வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த வீதிப் புனரமைப்பு வேலைகளினை  கிளிநொச்சி மாவட்ட பிரதி  நீர்ப்பாசன  பணிப்பாளர் K.கருணாநிதி,  கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன பொறியியலாளர் T.ரிஷியந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.இந்த நிகழ்வில் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement