• Dec 06 2024

புதையல் வேட்டையில் ஈடுபட்ட நபர் வவுனியாவில் கைது..!

Sharmi / Aug 20th 2024, 7:24 pm
image

வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவரை இன்று(20) அதிகாலை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது அவரிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

வவுனியா இராணு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது   54 வயதுடையவரே  கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

புதையல் வேட்டையில் ஈடுபட்ட நபர் வவுனியாவில் கைது. வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவரை இன்று(20) அதிகாலை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது அவரிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா இராணு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது   54 வயதுடையவரே  கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement