கிளிநொச்சியில் உள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் 28 வர்த்தக நிலையங்களை அமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வர்த்தகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.