• May 09 2024

நீர் வசதிகள் இன்றி சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் கிளிநொச்சி பொதுச் சந்தை...! வர்த்தகர்கள் விடுத்த கோரிக்கை...!

Sharmi / Mar 30th 2024, 2:43 pm
image

Advertisement

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீரின்மை காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர் வசதியின்மை காரணமாக பெரிதளவில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது வணிகத்திற்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள்  தெரிவிக்கின்றனர்.

மேலும்,  கிளிநொச்சி சந்தைப் பகுதியில் உள்ள பொது மலசலகூடம் தூய்மையின்றி காணப்படுவதாகவும் இது தொடர்பாக பல தடவைகள் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவித்தும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் சந்தை வளாக  வாய்க்கால்களும்  நீண்ட நாட்களாக துப்பரவு செய்யப்படாத நிலை காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சுகாதார சீர்கேடுகளால் நோய்கள் ஏற்பட அதிக சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எனவே  உடனடியாக விரைந்து தமக்கான நீர் வசதியையும் துப்பரவு பணியையும் மேற்கொள்ளுமாறும் வர்த்தகர்கள்  தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக செயற்பட்டு  இப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீர் வசதிகள் இன்றி சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் கிளிநொச்சி பொதுச் சந்தை. வர்த்தகர்கள் விடுத்த கோரிக்கை. கிளிநொச்சி பொதுச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீரின்மை காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நீர் வசதியின்மை காரணமாக பெரிதளவில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது வணிகத்திற்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள்  தெரிவிக்கின்றனர்.மேலும்,  கிளிநொச்சி சந்தைப் பகுதியில் உள்ள பொது மலசலகூடம் தூய்மையின்றி காணப்படுவதாகவும் இது தொடர்பாக பல தடவைகள் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவித்தும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் சந்தை வளாக  வாய்க்கால்களும்  நீண்ட நாட்களாக துப்பரவு செய்யப்படாத நிலை காணப்படுவதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.குறித்த சுகாதார சீர்கேடுகளால் நோய்கள் ஏற்பட அதிக சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எனவே  உடனடியாக விரைந்து தமக்கான நீர் வசதியையும் துப்பரவு பணியையும் மேற்கொள்ளுமாறும் வர்த்தகர்கள்  தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக செயற்பட்டு  இப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement